எனையாளும் மேரி மாதா
பாடியவர்: ஜிக்கி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை:
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
எனையாளும் மேரி மாதாதுணை நீயே மேரி மாதா - என்றும்
துணை நீயே மேரி மாதா
எனையாளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
பரிசுத்த ஆவியாலே பரபுத்ரன் ஈன்ற தாயே
பரிசுத்த ஆவியாலே பரபுத்ரன் ஈன்ற தாயே
ப்ரபு ஏசுநாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்
எனையாளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இல்லையே
அனுதினமும் சோதியாதே
எனையாளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா - என்றும்
துணை நீயே மேரி மாதா
