எல்லாம் உனக்கே தருவேனே
பாடியவர்: ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை:
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
ஆ...........இணையேதுமில்லாத விசால ஸ்ருஷ்டியிலே ஏ.........
இணையேதுமில்லாத விசால ஸ்ருஷ்டியிலே
விசித்திரங்களெல்லாம் எனதாகுமே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
ஆ...........
தளுக்கு தளுக்கெனவே தாரகை மின்னிடும்........
நீல வானகமும் எனதாகுமே...ஏ..........
எண்ணிலா மாந்தர்க்கு இதய வேகம் தரும்
குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே..... ஏ......
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
ஆ.............
மனோகரமாக குதூகலம் தரும்
வசந்த ருதுவும் எனதாகுமே...... ஏ......
மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்
மலைய மாருதமும் எனதாகுமே ஏ.....
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
