வாராயோ வெண்ணிலாவே

பாடியவர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி

இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்

இசை:

திரைப்படம்: மிஸ்ஸியம்மா

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோத மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
வாராயோ வெண்ணிலாவே

தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது
வாராயோ வெண்ணிலாவே

அனுதினம் செய்வார்மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார்மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

வாராயோ வெண்ணிலாவே

Designed and maintained by AKR Consultants