தெரிந்து கொள்ளணும் பெண்ணே

பாடியவர்: ஜிக்கி

இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்

இசை:

திரைப்படம்: மிஸ்ஸியம்மா

தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதைப் போல்
நடந்து கொள்ளணும் பெண்ணே
தெரிந்து கொள்ளணும் பெண்ணே

நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே
நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே - நீ

தெரிந்து கொள்ளணும் பெண்ணே
அதைப் போல் நடந்து கொள்ளணும் பெண்ணே
தெரிந்து கொள்ளணும் பெண்ணே

தனக்கு உதவி வேண்டினாலும் தானகவே போகாதே ஆ......
தனக்கு உதவி வேண்டினாலும் தானகவே போகாதே
இனிக்கப் பேசி அவதூறாய் ஏளனமே செய்வாரென்று
இனிக்கப் பேசி அவதூறாய் ஏளனமே செய்வாரென்று
தெரிந்து கொள்ளணும் பெண்ணே

பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும்
பதிலே சொல்லக் கூடாது ஆ.........
பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும்
பதிலே சொல்லக் கூடாது
பல பொருள்பட இல்லாததைப்
பறைசாற்றவே துணிவாரென்று
பல பொருள்பட இல்லாததைப்
பறைசாற்றவே துணிவாரென்று

தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதைப் போல்
நடந்து கொள்ளணும் பெண்ணே
தெரிந்து கொள்ளணும் பெண்ணே

தெரிந்து கொள்ளணும் பெண்ணே






Designed and maintained by AKR Consultants