பழகத் தெரிய வேணும்
பாடியவர்: ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை:
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
ஆ... ஆ......... ஆ....... ஆ....... ஆ....... ஆ.....பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
பழங்காலத்தின் நிலை மறந்து - ஆ..
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கே கூடாது - ஆ.
பிடிவாதமும் எதிர்வாதமும்
பெண்களுக்கே கூடாது
பேதமில்லா இதயத்தோடு
பேதமில்லா இதயத்தோடு
பெருமையோடு பொறுமையாக
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
கடுகடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கடுகடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கன்னியர்கள் ஆடவரைப்
புன்னகையால் வென்றிடவே
பழகத் தெரிய வேணும் உலகில்
பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழகத் தெரிய வேணும்
