முடியுமென்றால் படியாது
பாடியவர்: ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை:
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாதுமுடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்
அர்ததமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
அலுக்கிக் குலுக்கி ஒதுங்கி நின்றால் அருகில் ஓடி வாருமென்றே
வலியப் பேசி வாருமென்றால் வந்த வழியைப் பாருமென்றே
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்
அர்ததமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
வெறெப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம்
வெறெப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம்
விஷயமதிலே விருப்பமென்றே
சிரிச்சு சிரிச்சுப் பேசினாலும்
சரசம் இனியும் போதுமென்றே
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்
அர்ததமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்
அர்ததமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்