ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
பாடியவர்: ஏ.எம். ராஜா, ஜமுனா ராணி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை:
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்யாவருக்கும் பொது செல்வமன்றோ
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ?
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ?
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ?
புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?
புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?
ராகத்திலே அனுராகம் மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?
ராகத்திலே அனுராகம் மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ?
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ?
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ?
யாவருக்கும் பொது செல்வமன்றோ?
