அறியாப் பருவமடா
பாடியவர்: ஜமுனா ராணி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
இசை:
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
அறியாப் பருவமடாஅறியாப் பருவமடா மலர்
அம்பையே வீசாதடா - மதனா
அறியாப் பருவமடா
மாலையில் தென்றலில் மருவிடும் மலர்போல் ஓ..
மாலையில் தென்றலில் மருவிடும் மலர்போல்
மனமே மகிழ்ந்ததடா - வாழ்வில்
புது நிலை காணுதடா - மதனா
அறியாப் பருவமடா - மலர்
அம்பையே வீசாதடா - மதனா
அறியாப் பருவமடா
கொஞ்சிடும் கிளி போல் குலவிடவே மனம் ஆ....
கொஞ்சிடும் கிளி போல் குலவிடவே மனம்
மிஞ்சியே தாவுதடா - அதனால்
மேனியும் சிலிர்க்குதடா - மதனா
அறியாப் பருவமடா மலர்
அம்பையே வீசாதடா மதனா
அறியாப் பருவமடா
இதய காவினிலே இசைக்குயில் தானே ஏ....
இதய காவினிலே இசைக்குயில் தானே
இனிமையாய்க் கூவுதடா - மதனா
அறியாப் பருவமடா - மலர்
அம்பையே வீசாதடா - மதனா
அறியாப் பருவமடா
