காட்டுராணி கோட்டையிலே - திரைப்படம்: தாயைக் காத்த தனயன்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
ஆஆஆ........ம்ம்.......காட்டுராணி கோட்டையிலே கதவுகளில்லை இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை
காட்டுராணி கோட்டையிலே கதவுகளில்லை இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை
ஆ..... ஆ.. ஆ.. ஓ ஓ ஓ
காட்டிக் காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை - இதிலே
கலந்துவிட்டால் கால நேரம் தெரிவதுமில்லை
காட்டிக் காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை - இதிலே
கலந்துவிட்டால் கால நேரம் தெரிவதுமில்லை
காட்டுராணி கோட்டையிலே கதவுகளில்லை - இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை
ஆ..... ஆ.. ஆ.. ஆ ஆ ஆ
மேகமென்ற தந்தை கண்ணில் நீர் வழிந்தது - இங்கே
விதவிதமாய்க் குழந்தைகள் போல் செடி வளர்ந்தது
மேகமென்ற தந்தை கண்ணில் நீர் வழிந்தது - இங்கே
விதவிதமாய்க் குழந்தைகள் போல் செடி வளர்ந்தது
பூமியென்ற தாய் மடியில் தவழ்ந்து வந்தது
பூமியென்ற தாய் மடியில் தவழ்ந்து வந்தது - நோயில்
புலம்புகின்ற மனிதருக்கும் மருந்து தந்தது
காட்டுராணி கோட்டையிலே கதவுகளில்லை - இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை
ஆ..... ஆ.. ஆ.. ஆ ஆ ஆ