கோட்டையிலே ஒரு ஆலமரம் - திரைப்படம்: முரடன் முத்து

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றியவர்:

இசை:்

கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப் புறா

வெள்ளைப்புறாவின் குடும்பத்திலே வந்து
விழுந்ததம்மா ஒரு கள்ளப்புறா
கள்ளப்புறாவின் செயலாலே இன்று
கலங்குதம்மா ஒரு சின்னப்புறா

கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா

கண்ணீர்க் கடலில் படகு விட்டு - கரை
கடந்ததம்மா வாழ்ந்த கிளையை விட்டு
வண்ணமலர்க் காலின் பின்னலிலே நடை
வாடுதம்மா தங்கை என்னும் புறா
வாடுதம்மா தங்கை என்னும் புறா

கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா

உள்ளவர் வீட்டினுக்கே உறவு வரும் - அந்த
உறவு வந்தால் வீட்டில் பிரிவு வரும்
பிரிந்திருந்தால் நெஞ்சில் ஏக்கம் வரும் - அதன்
பின்பு வரும் பாசம் என்றும் வரும்

கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாட்ப்புறா
கோட்டியிலே.....
கோட்டையிலே ஒரு ஆலமரம்






Designed and maintained by AKR Consultants