மேகமே மேகமே பால்நிலா தேயுதே - திரைப்படம்: பாலைவனச் சோலை
பாடியவர்: வாணி ஜெயராம்
ஆ.......... ஆ......... ஆ........ ஆ..........மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி..........
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
தநிரிஸ ரிம தநிஸ் தநிபகா
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
பாவையின் ராகம் சோகங்களோ? ஆ......
பாவையின் ராகம் சோகங்களோ?
நீரலை போடும் கோலங்களோ?
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தூரிகை எரிகின்ற போது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ?.......
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
