ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் - திரைப்படம்: நீயா?

பாடியவர்: வாணி ஜெயராம்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஓரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஓரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா - ஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஓரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா - ஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான் - இன்று
நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான் - இன்று
நடமாட நீ வேண்டும் கண்ணா

அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஓரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா - ஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

இங்கே விண்மீன்கள் கண்ணாகிப் பார்க்கின்றன - நான்
வெறும் கோவில் ஆகாயம் பார்க்க உன்தன்
கண் மீன்கள் என் மீது விளையாடட்டும் அந்த
விண்மீன்கள் சுவையோடு பார்க்க
தேர் கொண்டு வா
கண்ணன் வந்து கீதை சொன்னால் நானாடுவேன்

அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நானாடுவேன் - இந்த
மழை மேகம் உன் மீது ஆடும்
அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நானாடுவேன் - இந்த
மழை மேகம் உன் மீது ஆடும்
கன்னம் கதுப்போடும் முகத்தோடும் நீ கூடலாம்
இந்தப் பழத்தோட்டம் உன்னோடு கூடும்
புது வெள்ளமே
ஓரே சொர்க்கம் என்தன் பக்கம் வேறில்லையே

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா - ஓ
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

This feature is powered by Dishant.com - Home of Indian Music






Designed and maintained by AKR Consultants