சின்னச்சின்ன இழை - திரைப்படம்: புதையல்

பாடியவர்: பி. சுசீலா

சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி

தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா
தையாதைய தந்தத் தானா தையாதையா தந்தத் தானா

அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புகழ்ந்திடும்
ஆடையடி செய்துமடி போடுங்கடி
ஓஹ்ஹ்ஹ்ஹ் (சின்னச்சின்ன)

சிந்தை சிர்ற்பிகள் தேசத்தறிஞர்கள்
செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள்
ஒஓ.... ஓ....

மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம்
காக்கும் மறவர் யாவரும் - புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்
வாங்கி மகிழும் பொன்னாடையடி
வாங்கி மகிழும் பொன்னாடையடி
ஓ.......... தான தையாதைய தந்தத் தன்ன தானா தையாதையா தந்தத் தானா

சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி

Audio சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும்






Designed and maintained by AKR Consultants