நாதமென்னும் கோவிலிலே - திரைப்படம்: மன்மத லீலை
பாடியவர்: வாணி ஜெயராம்
நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்ஏற்றி வைத்த விளக்கினிலே என்னை விட நீ கிடைத்தாய் (நாதமெனும்)
மதநிதஸ் ஸ்நிதம தமகரி மகரிஸ் மகரிஸ் தமகரி நிதம காமதாநிஸ்
இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தானதில் அசையும்
கரமும் உன்தன் சிரமும் நீ அசைத்தாய் நான் இசைத்தேன்
விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே நான் அழைத்தேன் உயிர் பிழைத்தேன் (நாதமெனும்)
மதநிதஸ் ஸ்நிதம தமகரி மக்ரிஸ் மக்ரிஸ் தமகரி நிதம காமதாநிஸ்
இறைவன் என ஒருவன் எனதிசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் இன்று அவன்தான் உன்னைத் கொடுத்தான்
