விண்ணோடும் முகிலோடும் - திரைப்படம்: பாவை விளக்கு
பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவேகண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
விளையாடி.. இசை பாடி....
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
விளையாடி.. இசை பாடி..
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
விளையாடி...... இசைபாடி......
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
|
