சின்னஞ்சிரிய வண்ணப்பறவை - திரைப்படம்: குங்குமம்

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி

ராகம்: தர்பாரி கானடா

சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொனனதைச் சொல்லுதம்மா

உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி

வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொணட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி அந்தக்
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி






Designed and maintained by AKR Consultants