Song: vaanaththil varuvathu - பாடல்: வானத்தில் வருவது ஒரு நிலவு
Movie: Kanchi thalaivan - திரைப்படம்: காஞ்சித் தலைவன்
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: T.M..சௌந்தரராஜன், பீ. சுசீலா
Lyrics: Alangudi Somu - இயற்றியவர்: ஆலங்குடி சோமு
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மகாதேவன்
Year: - ஆண்டு: 1963

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் - அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் - அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் - அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் - அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் - அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் - அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும் - கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும் - கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும்

வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

கோடையும் குளிராய் மாறி வரும் - அதில்
கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும் - அதில்
கோடி இன்பம் ஊறி வரும் - மண
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் - அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் - அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்

வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants