Movie: Iruvar ullam - திரைப்படம்: இருவர் உள்ளம்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம் நானதிலே ஒரு விதம்
கொண்டாட்டம் பலவிதம் நானதிலே ஒரு விதம்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும்
இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
