Movie: Iruvar ullam - திரைப்படம்: இருவர் உள்ளம்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ச்ச்ச்ச்ச்
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ச்ச்ச்ச்ச்
கண்ணெதிரே தோன்றினாள்
பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும் நெற்றிப்
பரப்பினிலே முத்தான வேர்வையும்
பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும் நெற்றிப்
பரப்பினிலே முத்தான வேர்வையும்
பின்னி வரும் நாணம் என்னும் போர்வையும்
பின்னி வரும் நாணம் என்னும் போர்வையும் சுற்றிப்
பின்னலிட்ட கூந்தல் எனும் தோகையும் கொண்டு இன்று
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ச்ச்ச்ச்ச்
கண்ணெதிரே தோன்றினாள்
என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள்
இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்
என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள்
இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள்
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள் அந்த
இனிய மகள் எனது தாய்க்கு மருமகளானாள் இன்று
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ச்ச்ச்ச்ச்
கண்ணெதிரே தோன்றினாள்
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |