Movie: Iruvar ullam - திரைப்படம்: இருவர் உள்ளம்
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே பெண்மையை வழக்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே பெண்மையை வழக்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
மல்லிகை முல்லை வாருங்கள் என் மலரணை தனிலே சேருங்கள்
மல்லிகை முல்லை வாருங்கள் என் மலரணை தனிலே சேருங்கள் நாங்கள்
துள்ளியெழுந்து ஆடிடும் போது துவண்டு விழுந்து வாடுங்கள்
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே பெண்மையை வழக்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
இத்தனை நாளாய் இருண்டு கிடந்த இறைவன் வீட்டின் திருவிளக்கு
இத்தனை நாளாய் இருண்டு கிடந்த இறைவன் வீட்டின் திருவிளக்கு நான்
ஏற்றி விட்டேன் அவர் காண்பதற்கென்றே எரிகிறதம்மா ஒரு விளக்கு
கண்ணே கண்ணே உறங்காதே
நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே பட வேண்டும்
நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே பட வேண்டும்
சுற்றிய கூந்தல் மல்லிகை அவர் தோளின் மேலே விழ வேண்டும்
கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |