Movie: Iruvar ullam - திரைப்படம்: இருவர் உள்ளம்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்?
நானழுது ஓய்ந்ததற்கோ நன்றி சொல்லவோ அழுதாய்?
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்?
நானழுது ஓய்ந்ததற்கோ நன்றி சொல்லவோ அழுதாய்?
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்?
ஆன வரை சொல்லிவிட்டேன் அழுதழுது பார்த்து விட்டேன்
ஆன வரை சொல்லிவிட்டேன் அழுதழுது பார்த்து விட்டேன்
தாய் மொழியில் வார்த்தையில்லை வாய் மொழிக்கும் வலிமை இல்லை
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
என் வழக்கில் சாட்சியில்லை எனது பக்கம் யாருமில்லை
என் வழக்கில் சாட்சியில்லை எனது பக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகை கூட சமுதாயம் தரவில்லையே
மரணம் வந்தால் தெரிந்து விடும் நான் மனிதன் என்று புரிந்து விடும்
மரணம் வந்தால் தெரிந்து விடும் நான் மனிதன் என்று புரிந்து விடும்
ஊர் சுமந்து போகும் போது உனக்கும் கூட விளங்கிவிடும்
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்?
நானழுது ஓய்ந்ததற்கோ நன்றி சொல்லவோ அழுதாய்?
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்?
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |