Movie: Iruvar ullam - திரைப்படம்: இருவர் உள்ளம்
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1963
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
உண்டு சுவைக்கின்றது உறங்கி விழுகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
மேனி குளிர்கின்றது வெள்ளம் வடிகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
இரவு விடிகின்றது இளமை எழுகின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
