Song: yaarai nambi naan poranthen - பாடல்: யாரை நம்பி நான் பொறந்தேன்
Movie: Enga oor raja - திரைப்படம்: எங்க ஊர் ராஜா
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
Music: M.S. Viswanathan, B. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1968

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு

பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants