Song: kaalai vayasu - பாடல்: காளை வயசு கட்டான சைசு
Movie: Deivapiravi - திரைப்படம்: தெய்வப் பிறவி
Singers: K. Jamunarani
பாடியவர்: கே. ஜமுனாராணி
Lyrics: Poet T.N. Ramaiah das - இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1960

அஹஹாஹாஹா ஆஹாஹாஹாஹா
ஆஹஹஹாஹா ஆஹஹஹாஹா ஆஹஹாஹாஹா ஹஹஹா

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு - எங்கள்
காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று

பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்
காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு





To Listen: காளை வயசு கட்டான சைசு


Designed and maintained by AKR Consultants