Song: anbale thediya - பாடல்: அன்பாலே தேடிய என்
Movie: Deivapiravi - திரைப்படம்: தெய்வப் பிறவி
Singers: C.S. Jayaraman, S. Janaki
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன், எஸ். ஜானகி
Lyrics: Poet T.N. Ramaiah das - இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1960

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம் ஆ...
அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம்
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்

ஆ...ஆ...ஆ...ஆ..
இன்பம் தரும் தேன் நிலவு இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம் ஆ...
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்

உடல் நான் ஆ... உரம் நீ.. ம்ம்..
உடல் நான் அதில் உரம் நீ என உறவு கொண்டோம் நேர்மையால் ஆ...
உடல் நான் அதில் உரம் நீ என உறவு கொண்டோம் நேர்மையால்
கடல் நிலவாய்க் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால் ஆ...ஆ...ஆ....ஆ...
புடம் நிறை மாற்றறியாப் பொன்னே சொல் ஏன் த்யானம்
புடம் நிறை மாற்றறியாப் பொன்னே சொல் ஏன் த்யானம்
போனால் வராது இது போலே காலம் இனி ஆ...
போனால் வராது இது போலே காலம் இனி

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் ஆ..
அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம் ஆ..
அம்புலியின் மீது நான் அணிபெறும் ஓரங்கம்
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants