Song: naan enna solli vitten - பாடல்: நான் என்ன சொல்லிவிட்டேன்
Movie: - திரைப்படம்: பலே பாண்டியா
Singers: T.M. Soundararajan
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, B. Ramamurthy - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1962

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி - கொண்ட
மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி - கொண்ட
மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறி விட்டதடி முகம் மாறி விட்டதடி
சுகம் ஊறி விட்டதடி முகம் மாறி விட்டதடி - நெஞ்சில்
அன்றில்லாத நாணம் இன்று எங்கு வந்ததடி? என்ன? என்ன? என்ன?

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

மலர்ப் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் - உன்
நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ?
மலர்ப் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் - உன்
நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ? - கண்டு
ஏங்குகின்றாயோ நின்று தூங்குகின்றாயோ? - நாம்
பழகப் போகும் அழகையெல்லாம் படம் பிடித்தாயோ? என்ன? என்ன? என்ன?

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலைகுனிந்தாயோ?
என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants