Movie: - திரைப்படம்: பலே பாண்டியா
Singers: P.B. Srinivas, Jamuna Rani- பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, B. Ramamurthy - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1962
ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..ம்ஹ்ம்..ம்ஹ்ம்..ம்ஹ்ம்..ம்ஹ்ம்ம்..
ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்
ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்
கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்
காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன்
கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்
காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன் அன்று
அன்னத்திடம் தமயந்தி தூது விட்டாள் இன்று
அண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்
அந்தக் காதல் காதலா இந்தக் காதல் காதலா?
ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்
ஊரை விட்டு ஓடி வந்த காதல் இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல் இது காவியத்தில் இல்லாத காதல்
பேரை மட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல் இது உலகத்தில் இல்லாத காதல்
இது தேவருக்கும் மூவருக்கும் சொந்தக் காதல் வெறும்
மானிடர்க்குத் தோன்றாது இந்தக் காதல்
இந்தக் காதல் காதலா அந்தக் காதல் காதலா?
ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே அடுத்த ஜோடி இது தான்
ஹஹஹாஹஹா ம்ம்ம்ம் ஓஹொஹோ ஒ..ஓ. ம்ம்ம் ஆ..
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |