Song: manithan ellam - பாடல்: மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
Movie: Azhagu nila - திரைப்படம்: அழகு நிலா
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: - இசை:
Year: - ஆண்டு: 1960

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants