SONGS OF

P.B. Srinivas
T.M. Soundararajan
Seerkazhi Govindarajan
Thiruchi Loganathan
C.S. Jayaraman songs

Thiruvarut Chelvar
MGR Madurai Veeram
Aadip perukku
Aadavandha dheivam
Aalaya maNi
annaiyin aaNai











Song: அதிசய ராகம் ஆனந்த ராகம் - athisaya raagam
Movie: Apoorva raagangal - திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
Singers: K.J. Jesudas பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: 1975

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
மோகம் மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants