Song: kanindha alliyodu - பாடல்: கனிந்த அல்லியோடு
Movie: Anarkali - திரைப்படம்: அனார்கலி
Singers: Gantasala, Jikki - பாடியவர்: கண்டசாலா, ஜிக்கி
Lyrics: Thanjai N. Ramiah Doss - இயற்றியவர்:
Music: Adinarayana Rao - இசை: ஆதிநாராயண ராவ்
Year: - ஆண்டு: 1955

ஆ.... ஆ... ஓ.... ஓ...
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ

காதல் மலரில் மது மேலே மயங்கும் வண்டுபோலே
மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே ஏ
இந்நாளே மலர்ந்தது உன்னாலே

வலையில் விழும் மானே உன்னால் தானே
நிலை உணர்ந்ததாலே உன்னால் நானே
வலையில் விழும் மானே உன்னால் தானே
நிலை உணர்ந்ததாலே உன்னால் நானே

கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ

என் நிலவே உன் வானில் தவழும் பாராய்
தண் ஒளியாக வானில் வளர் தாரா
மனக்கண்ணில் வாழும் எழில் வீரா
மனக்கண்ணில் வாழும் எழில் வீரா
கனிவானதே அதன் சுவை காணுதே
கனிவானதே அதன் சுவை காணுதே
இருமனம் ஒருமலர் அன்பானதே

கனிந்த அல்லியோடும் நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ





This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants