Tamil Music - soru manakkum sonadaa - சோறு மணக்கும் சோணாடா 







Song: soru manakkum sonada - பாடல்: சோறு மணக்கும் சோணாடா
Movie: ambikapathi - திரைப்படம்: அம்பிகாபதி
Singers: V.N. Sundaram, T.M. Soundararajan
பாடியவர்: வி.என். சுந்தரம், T.M. சௌந்தரராஜன்
Lyrics: K.D. Santhanam - இயற்றியவர்: கே.டி. சந்தானம்
Music: G. ramanathan - இசை: G. ராமநாதன்
Year: - ஆண்டு: 1957

சோறு மணக்கும் சோணாடா





சோறு மணக்கும் சோணாடா
சோலை மணக்கப் புகழ் மணக்கப் பொன்னியெனும்
ஆறு மணக்கும் புனல் நாடா
ஆட்சி மணக்க அருள் மணக்கும்
ஈழமதில் வீறு மணக்கும் குலோத்துங்கா
வெற்றி மணக்க வீரம் மணக்க புவனியெல்லாம்
பேறு மணக்கப் பிறந்தாய் நீ பேரறிஞர்
போற்றி மணக்க வாழியவே! வாழியவே!

வரும் பகைவர் படை கண்டு மார் தட்டிக் களம் புகும்
மக்களைப் பெற்றோர் வாழ்க ஆஆஆஆ..
மணங்கொண்ட துணைவர்க்கு விடை தந்து
வேல் தந்த மறக்குலப் பெண்கள் வாழ்க
புறங்கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறங்காத்த உள்ளம் வாழ்க
திறமான புகழ் கொண்ட திடமான தோள்களும்
செயல்வீரர் மரபும் வாழ்க ஆஆஆஆ....

அம்புலியைக் குழம்பாக்கி அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து
இன்பநிறை முகமாக்கி கயலிரண்டைக் கண்ணாக்கி
மன்னன் ஈன்ற பைங்கிளியே பைங்கிளியே
அயலொருவர் கண்படுமோ என்றஞ்சி

பயத்தோடுன்னை கங்குலிலே காண்பதல்லால்
கணப்பொழுதும் இணைபிரியாக் காலம் என்றோ? ஓ..

sORu maNakkum sONaataa
sOlai maNakkap pukazh maNakkap ponniyenum
aaRu maNakkum punal naataa
aatchi maNakka aruL maNakkum
eezhamadhil veeRu maNakkum kulOththungaa
vetri maNakka veeram maNakka puvaniyellaam
pERu maNakkap piRandhaai nee pEraRignar
pOtri maNakka vaazhiyavE! vaazhiyavE!

varum pakaivar patai kaNtu maar thattik kaLam pukum
makkaLaip petrOr vaazhka aaaaaaaa..
maNangoNta thuNaivarkku vitai thandhu
vEl thandha maRakkulap peNkaL vaazhka
puRangoNtu pOraati udhiraththil neeraati
aRangaaththa uLLam vaazhka
thiRamaana pukazh koNta thitamaana thOLkaLum
seyalveerar marapum vaazhka aaaaaaaa....

ampuliyaik kuzhampaakki aravindha rasamOtu amudhum sErththu
inpaniRai mukamaakki kayaliraNtaik kaNNaakki
mannan eendra paingiLiyE paingiLiyE
ayaloruvar kaNpatumO endranji

payaththOtunnai kangulilE kaaNpadhallaal
kaNappozhudhum iNaipiriyaak kaalam endrO? O..

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants