Tamil Music - maasila nilave - மாசிலா நிலவே 

Song: maasila nilave - பாடல்: மாசிலா நிலவே
Movie: ambikapathi - திரைப்படம்: அம்பிகாபதி
Singers: T.M. Soundararajan, P. Banumathi
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. பானுமதி
Lyrics: K.D. Santhanam - இயற்றியவர்: கே.டி. சந்தானம்
Music: G. ramanathan - இசை: G. ராமநாதன்
Year: - ஆண்டு: 1957

மாசிலா நிலவே

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே கண்ணே மாநிலம் கொண்டாடுதே
பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே கண்ணா பேதங்கள் பறந்தோடுதே
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே

சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே தீபமாய் ஒளி வீசுதே
மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி
மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி
மௌனமாய் நமை வாழ்த்துதே கண்ணா
மௌனமாய் நமை வாழ்த்துதே

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே கண்ணா மாநிலம் கொண்டாடுதே

ஆ....ஆ...ஆ....ஆ..ஆ..ஆ..

அன்பே இன்பம் எங்கே? இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம்
நீரோடு நீர் போல நாம் கூடுவோம்
அன்பே இன்பம் எங்கே? இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம்

நீந்தும் அலையின் மீது நிலவின் தண்ணொளி விளையாடுதே
தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே - உன்தன்
மீன் விழிகளைக் காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
மீன் விழிகளைக் காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
ஆணெழில் முகம் வான்மதி என அல்லியும் உமை நாடுதே
ஆணெழில் முகம் வான்மதி என அல்லியும் உமை நாடுதே

அன்பே இன்பம் எங்கே இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம்

வானமிங்கே பூமி இங்கே வாழ்வு தாழ்வெங்கே?
காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?
வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை
கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

maasilaa nilavE nam kaadhalai makizhvOtu
maanilam koNtaatudhE kaNNE maanilam koNtaatudhE
pEsavum aridhaana prEmaiyin thiRam kaNtu
pEsavum aridhaana prEmaiyin thiRam kaNtu
pEdhangaL paRandhOtudhE kaNNaa pEdhangaL paRandhOtudhE
maasilaa nilavE nam kaadhalai makizhvOtu
maanilam koNtaatudhE

seerutan vaan meedhil thaarakai pala kOti
seerutan vaan meedhil thaarakai pala kOti
theepamaai oLiveesudhE kaNNE theepamaai oLi veesudhE
maarudham thanil aatum maandhaLirk karam neetti
maarudham thanil aatum maandhaLirk karam neetti
mownamaai namai vaazhththudhE kaNNaa
mownamaai namai vaazhththudhE

maasilaa nilavE nam kaadhalai makizhvOtu
maanilam koNtaatudhE kaNNaa maanilam koNtaatudhE

aa....aa...aa....aa..aa..aa..

anpE inpam engE? ingE maaRaadha pErinpa neeraatuvOm
neerOtu neer pOla naam kootuvOm
anpE inpam engE? ingE maaRaadha pErinpa neeraatuvOm

neendhum alaiyin meedhu nilavin thaNNoLi viLaiyaatudhE
thEn thuLikaLai Endhum malarum thendralum uRavaatudhE - undhan
meen vizhikaLaik kaaNum nadhiyin meenkaLum thuLLi aatudhE
meen vizhikaLaik kaaNum nadhiyin meenkaLum thuLLi aatudhE
aaNezhil mukam vaanmadhi ena alliyum umai naatudhE
aaNezhil mukam vaanmadhi ena alliyum umai naatudhE

anpE inpam engE ingE maaRaadha pErinpa neeraatuvOm

vaanamingE poomi ingE vaazhvu thaazhvengE?
kaaNum yaavum kaadhalandri vERu EdhingE?
vENu kaanam thendralOtu sErndha pinnaalE
vENu kaanam thendralOtu sErndha pinnaalE
kaanam vERu kaatru vERaaik kEtpadhE illai
kaanam vERu kaatru vERaaik kEtpadhE illai

ini naanum vERillai ini naanum vERillai
ini naanum vERillai ini naanum vERillai
ini naanum vERillai ini naanum vERillai

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook

PLEASE GIVE YOUR FEEDBACK

*Name:  

*E-mail:  

*Comments:

Designed and maintained by AKR Consultants