Tamil Music - aadattumaa konjam paadattumaa - ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா? 

Song: aadattumaa - பாடல்: ஆடட்டுமா
Movie: ambikapathi - திரைப்படம்: அம்பிகாபதி
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: K.D. Santhanam - இயற்றியவர்: கே.டி. சந்தானம்
Music: G. ramanathan - இசை: G. ராமநாதன்
Year: - ஆண்டு: 1957

ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?

ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா? அத்தான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா? அத்தான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா? உங்கள்
அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?

கொஞ்சும் இதழ்களிலே குறுநகை மலரவில்லை
குமுத விழிகளிலே குளிர் தரும் பார்வையில்லை
சிந்து மழை பொழியும் செவ்வாய் திறக்கவில்லை
சித்திரம் போல் இருக்கும் செய்கை விளங்கவில்லை
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?
உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?

பாடிக் களைத்தீரோ பாடுதற்குப் புதுப் பொருளைத்
தேடிக் களைத்தீரோ? தேன் மணக்கும் தமிழ்க் கடலில்
ஆடிக் களைத்தீரோ ஆராய்ச்சிப் பாதையிலே
வாடிக் களைத்தீரோ வாய் திறக்க மாட்டீரோ?

உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?
உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?

கன்னத்தில் கை ஏனோ கப்பல் கவிழ்ந்ததுவோ?
மின்னாமல் முழங்கிடும் மேகம் இனி முழங்காதோ?
என்ன குறை? மௌனம் ஒன்று தானோ?
இல்லே, உண்ணாவிரதங்கூட உண்டோ?

உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?
உங்கள் அழகான வதனமதில் ஆனந்தம் உண்டாக நான்
ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா?

aatattumaa konjam paatattumaa? aththaan
aatattumaa konjam paatattumaa? aththaan
aatattumaa konjam paatattumaa? ungaL
azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?

konjum idhazhkaLilE kuRunakai malaravillai
kumudha vizhikaLilE kuLir tharum paarvaiyillai
sindhu mazhai pozhiyum sevvaai thiRakkavillai
siththiram pOl irukkum seykai viLangavillai
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

ungaL azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?
ungaL azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?

paatik kaLaiththeerO paatudhaRkup pudhup poruLaith
thEtik kaLaiththeerO? thEn maNakkum thamizhk katalil
aatik kaLaiththeerO aaraaichchip paadhaiyilE
vaatik kaLaiththeerO vaai thiRakka maatteerO?

ungaL azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?
ungaL azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?

kannaththil kai EnO kappal kavizhndhadhuvO?
minnaamal muzhangitum mEkam ini muzhangaadhO?
enna kuRai? mownam ondru thaanO?
illE, uNNaaviradhangoota uNtO?

ungaL azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?
ungaL azhakaana vadhanamadhil aanandham uNtaaka naan
aatattumaa konjam paatattumaa?

AUDIO LINK (LISTEN TO THE SONG)

Post your comments to Facebook

PLEASE GIVE YOUR FEEDBACK

*Name:  

*E-mail:  

*Comments:

Designed and maintained by AKR Consultants