Song: aayiram nilave vaa- பாடல்: ஆயிரம் நிலவே வா
Movie: Adimai penn - திரைப்படம்: அடிமைப் பெண்
Singers: S.P. Balasubramaniam, P. Suseela - பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
Lyrics: Poet Vali, இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: KV. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1969

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்கவேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants