SONGS OF

P.B. Srinivas
T.M. Soundararajan
Seerkazhi Govindarajan
Thiruchi Loganathan
C.S. Jayaraman songs

Thiruvarut Chelvar
MGR Madurai Veeram
Aadip perukku
Aadavandha dheivam
Aalaya maNi
annaiyin aaNai

pani illatha margazhiya - பனியில்லாத மார்கழியா
Movie - aanandha jyothi திரைப்படம்: ஆனந்த ஜோதி
Singers: P. Suseela பாடியவர்: T.M. சௌந்தரராஜன், P. சுசீலா
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
Year: 1963

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

ஆஹா...ஆ... ஆஹா.. ஆ.. ஆ..ஆ..ஆஆஆ

தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

This feature is powered by Dishant.com - Home of Indian Music

Designed and maintained by AKR Consultants