Movie - aanandha jyothi திரைப்படம்: ஆனந்த ஜோதி
Singers: T.M. Soundararajan பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
Year: 1963
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவைப் பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!
உரிமையில் நான்கு திசை கொண்டோம் உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம் முத்தமிழ் என்னும் உயிர் தந்தோம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம் ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம் ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |