Movie: Aalukkoru veedu - திரைப்படம்: ஆளுக்கொரு வீடு
Singers: P.B. Srinivas, P. Suseela - பாடியவர்: பி.நி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
Lyrics: Pattukkotai Kalyanasundaram - இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
Music: M.S. viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1960
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ?
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிடலாமோ?
உறவானது மனதில் ஆ ஆ மணமானது நினைவில் ஒ ஓ இதை
மாற்றுவதார் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில் இதை
மாற்றுவதார் மானே வையகம் மீதில்
அஞ்சுவதி்ல் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா?
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
காதலுக்கே உலகமென்று கனவில் கண்டேனே நான்
கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே
காதலுக்கே உலகமென்று கனவில் கண்டேனே நான்
கனவில் கண்ட காட்சியெல்லாம் கண்ணில் கண்டேனே இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு இது
காவியக் கனவு இல்லை காரியக் கனவு புது
வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே
| This feature is powered by Dishant.com - Home of Indian Music |
