கல்லிலே கலைவண்ணம் கண்டான் - திரைப்படம்: குமுதம்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு
கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு
கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்

பல்லவர் கோன் கண்ட மல்லை போலப்
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை
கல்லிலே கலைவண்ணம் கண்டான்

பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோம்
கண்ணான இடந்தேடி வந்தோம் - என்
கண்ணோடு கண்ணே உன்
கண் வைத்துப் பார்ப்பாய்
கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு
கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்

பருவத்தில் இளமேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
பருவத்தில் இளமேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்

உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கின்றேன் கண்ணே
உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கின்றேன் கண்ணே
கடல் வற்றிப் போனாலும் போகும் கொண்ட
கடமையும் ஆசையும் மாறாதெந்நாளும்

கல்லிலே கலைவண்ணம் கண்டான் - இரு
கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants