இயற்கை அன்னை தந்ததெல்லாம் - திரைப்படம்: எங்க வீட்டுப் பெண்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா

வான்மழை நீரின் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வான்மழை நீரின் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும்
தீயவர் ஆவதுண்டு

உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்குப் பின்னும் இருக்குமடா
உரிமை என்றால் சிரிக்குமடா

இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா

இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா - இந்த
இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன்
இதயம் திறந்ததடா
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதரில்லை
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதரில்லை
நாம் என்ற ஒற்றுமை வந்தால்
நாட்டினிலே துயருமில்லை

இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants