உள்ளத்தில் நல்ல உள்ளம் - திரைப்படம்: கர்ணன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா - நானும்
உன் பழி கொண்டேனடா - நானும்
உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவ் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants