வான மீதில் நீந்தி யோடும் - திரைப்படம்: கோமதியின் காதலன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
வான மீதில் நீந்தி யோடும் வெண்ணிலாவே - நீ தான்வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே?
வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே - நீ தான்
வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
நானும் உன்னைப் பார்த்துவிட்டால் வெண்ணிலாவே
நானும் உன்னைப் பார்த்துவிட்டால் வெண்ணிலாவே - முகம்
நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே?
நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே?
பட்டப் பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னைப்
பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே
பட்டப் பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னைப்
பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே
வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே - ரெண்டு
வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே?
வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே?
வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
|
