ஓடம் நதியினிலே - திரைப்படம்: காத்திருந்த கண்கள்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

ஆசை எனும் மேடையிலே ஆடி வரும் வாழ்வினிலே
ஆசை எனும் மேடையிலே ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார் யாரரிவார் உலகிலே
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டுவரும் வெளியினிலே
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டுவரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்த பின்னே குயில் இருந்தும் பயனில்லே

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants