சமரசம் உலாவும் இடமே - திரைப்படம்: ரம்பையின் காதல்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோரென்றும்
தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சேவை செய்யும் தியாகி சிங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
|
