அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்:

இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

திரைப்படம்: அன்னையின் ஆணை

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள்
அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே ஏ..ஆ...
துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே - நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் ஆஆஆஆ..
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை






Designed and maintained by AKR Consultants