சிந்தித்தால் சிரிப்பு வரும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: செங்கமலத் தீவு

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

மோசடிப் பாதையிலே காசினைச் சேர்த்தாலும்
மோசடிப் பாதையிலே காசினைச் சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா வெண்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

வனம் தனிலே திரியும் பறவை மிருகமெல்லாம்
வனம் தனிலே திரியும் பறவை மிருகமெல்லாம்
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants