சத்தியம் இது சத்தியம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:
திரைப்படம்: இது சத்தியம்
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
எத்தனையோ சிறைகளை நான்
பார்த்துவிட்டேன் போடா போ போடா போ
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
தலைக்கு மேலே வெள்ளம் போனால்
ஜாணென்ன முழமென்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாளென்ன பொழுதென்ன
விலைக்கு மேலே விலை வைத்தாலும்
மனிதன் விலை என்ன உயிர்
விட்டுவிட்டால் உடல் சுட்டுவிட்டால் - அதில்
அடுத்த கதை என்ன என்ன? - அதில்
அடுத்த கதை என்ன
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன்
பைத்தியக் காரனடா
பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன்
பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன்
நிச்சயம் மிருகமடா நல்ல
நேர்மையிலும் தன் வேர்வையிலும் - தினம்
வாழ்பவன் தெய்வமடா - தினம்
வாழ்பவன் தெய்வமடா
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
|
