படைத்தானே படைத்தானே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:

திரைப்படம்:

படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே

கொடுத்தானே கொடுத்தானே
பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே
மனதையும் கவலையும் பிரித்தானே

படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த மனிதன் மனதில்
குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி
கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான்
அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான்
துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை

படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில்
சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரைத் தன்னுடன் சேர்த்தான்
என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில்
எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும்
என்றும் மயக்கமடா

படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants