ஓராயிரம் பார்வையிலே

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்

இந்த மானிடர் காதலெல்லாம் - ஒரு
மரணத்தில் மாறிவிடும் அந்த
மலர்களின் வாசமெல்லாம் - ஒரு
மாலைக்குள் வாடிவிடும் - நம்
காதலின் தீபம் மட்டும் - எந்த
நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்

இந்தக் காற்றினில் நான் கலந்தே - உன்
கண்களைத் தழுவுகின்றேன் - இந்த
ஆற்றினில் ஓடுகின்றேன் - உன்
ஆடையில் ஆடுகின்றேன் - நான்
போகின்ற பாதையெல்லாம் - உன்
பூ முகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants