சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:
திரைப்படம்: பாவ மன்னிப்பு
காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே
கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே
ஒன்று பட வழியிலையே உண்மைக்கு மொழியிலையே
உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும் அந்தப் பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன் உரிமை இல்லாமல் அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத் தேடி அலைகின்றார்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்

|