காகிதத்தில் கப்பல் செய்து
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:
திரைப்படம்:
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

மானமென்ற பொருள் காக்க மனக் கதவை மூடி வைத்தேன்
நாலு பக்கம் திறந்து கொண்டால் நான் அதற்கு என்ன செய்வேன்
நான் அதற்கு என்ன செய்வேன்
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன்

மலர் பறிக்கும் வேளையிலே முள் தைத்த கதையானேன்
முள் தைத்த கதையானேன்
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்
தாய் முகத்தைப் பார்க்காமல் யார் முகத்தைப் பார்த்தழுவேன்?

நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போயிருப்பேன்? - அம்மா
யார் நிழலில் போயிருப்பேன்?

|